search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கூட்டம்"

    விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். #Farmersmeeting

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் விசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் சங்கர் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை ஆய்வாளர் நாகராஜன், துணை தாசில்தார் முருகு, விவசாய சங்கத்தலைவர் ராஜன், செயலாளர் ஒளிச்சந்திரன், புலவர் மன்றம் கந்தசாமி, முன்னோடி விவசாயி மணியன், காவேரி தமிழ்தேச விவசாய சங்கத்தைச் சேர்நத சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், மற்றும் வேளாண்மைத்துறையினர், பொதுப்பணித்துறையினர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் காவிரியில் கடைமடை பாசன பகுதியான ஆதனூர், கருப்பம்புலம், கடினல்வயல், கைலவனம்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளில் மின் இறவை பாசனத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். கோவில்தாவில் உள்ள சட்ரஸ் பழுதடைந்து சரிசெய்யப்படாமல் உள்ளது. இதை சரிசெய்ய நிதி ஒதுக்கி ஓராண்டு ஆகியும் இதுவரை எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இந்த சட்ரஸை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்.

    வண்டுவாஞ்சேரியில் உள்ள அரசுக்கு சொந்தமான 144 ஏக்கர் நிலத்தை தூர்வாரி நீர்தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2013-14-ம் ஆண்டிற்கான வறட்சி நிவாரணம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    முன்னதாக மேட்டூரில் தண்ணீர் திறந்ததையொட்டி விவசாயிகள் தாலுக்கா அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். #Farmersmeeting

    ×